ரேஷன் அரிசி பறிமுதல்
வீட்டில் பதுக்கிய ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
திருநெல்வேலி
தென்காசி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசாருக்கு ஊத்துமலை பகுதியில் ஒரு வீட்டில் சட்ட விரோதமாக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் ஊத்துமலை பகுதியில் சோதனை செய்த போது வென்னிலிங்கபுரம் நடுத்தெருவில் ஒரு காலி இடத்தில் சுமார் 1,120 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார், ரேஷன் அரிசியை பதுக்கி வைத்த தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள அய்யனாரூத்து பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். தொடர்ந்து அங்கிருந்து அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story