வேப்பனப்பள்ளியில் இருந்து கர்நாடகாவுக்கு சரக்கு வேனில் கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்டிரைவர் கைது


வேப்பனப்பள்ளியில் இருந்து கர்நாடகாவுக்கு சரக்கு வேனில் கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்டிரைவர் கைது
x
தினத்தந்தி 21 Jun 2023 1:15 AM IST (Updated: 21 Jun 2023 1:45 PM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

வேப்பனப்பள்ளியில் இருந்து கர்நாடகாவுக்கு சரக்கு வேனில் கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசியை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.

வாகன சோதனை

கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக கர்நாடகா, ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க மாவட்ட கலெக்டர் சரயு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் மற்றும் வருவாய்த்துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் மாவட்ட வழங்கல் அலுவலர் சுகுமார் மேற்பார்வையில், பறக்கும் படை தாசில்தார் இளங்கோ தலைமையிலான வருவாய்த்துறையினர் நேற்று வேப்பனப்பள்ளி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தமிழக- கர்நாடக மாநில எல்லையான சிங்கிரிப்பள்ளி அருகே அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனர்.

கைது-பறிமுதல்

அந்த வேனில் 60 மூட்டைகளில் 3 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக டிரைவரிடம் அலுவலர்கள் விசாரணை நடத்தினர். அவர் சின்னகொத்தூரை சேர்ந்த சக்திவேல் (வயது 20) என்பதும், வேப்பனப்பள்ளி பகுதியில் பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி கர்நாடகாவுக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது.

தொடர்ந்து டிரைவர் மற்றும் வேனுடன் ரேஷன் அரிசியை உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் வருவாய்த்துறையினர் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார், டிரைவரை கைது செய்தனர். மேலும் சரக்கு வேனுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.


Next Story