கிருஷ்ணகிரியில் இருந்து கர்நாடகாவுக்கு சரக்கு வேனில் கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் டிரைவர் கைது
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி மற்றும் போலீசார் நேற்று ராயக்கோட்டை - கிருஷ்ணகிரி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். மூங்கில்புதூர் அருகே அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் 36 சாக்கு மூட்டைகளில், 1½ டன் ரேஷன் அரிசி இருந்தது தெரிந்தது.
இதையடுத்து வேனை ஓட்டி வந்த கிருஷ்ணகிரி அடுத்த சின்னகொத்தூரை சேர்ந்த சரவணன் (வயது 22) என்பவரை போலீசார் கைது செய்து, வேனையும் பறிமுதல் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அவர் பெல்லாரம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் ரேஷன் அரிசியை விலைக்கு வாங்கி, கர்நாடகத்திற்கு கடத்த முயன்றது தெரிந்தது. இது தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story