காரில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்


காரில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்
x

நெல்லை அருகே காரில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ்வரன் மற்றும் போலீசார் நெல்லை அருகே கிருஷ்ணாபுரம் சோதனை சாவடியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக காரில் வந்த 2 பேர், போலீசார் இருப்பதை பார்த்ததும் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு ஓடிவிட்டனர். போலீசார் காரை ஆய்வு செய்த போது காரில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து காரில் இருந்து தப்பிச்சென்ற நெல்லை உத்தமபாண்டிபுரத்தை சேர்ந்த மணி மற்றும் மகாராஜன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, காரில் இருந்த 480 கிலோ ரேஷன் அரிசியை காருடன் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story