ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்


ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்
x

பொன்னை அருகே ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

வேலூர்

தமிழ்நாட்டில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்துவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வேலூர் பறக்கும் படை தாசில்தார் விநாயகமூர்த்தி மற்றும் பறக்கும் படை குழுவினர் பொன்னை- சித்தூர் பிரதான சாலையில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சீனிவாசபுரம் கிராமத்தில் சாலை ஓரமாக ஆந்திர மாநிலத்துக்கு கடத்துவதற்காக 22 மூட்டைகளில் சுமார் 704 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்த ரேஷன் அரிசியை கைப்பற்றி திருவலம் உணவுப்பொருள் சேமிப்பு கிடங்கில் ஒப்படைத்தனர்.


Next Story