வீட்டில் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கி பறிமுதல்
ஜவ்வாதுமலை அருகே வீட்டில் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்து முதியவரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை
கண்ணமங்கலம்
சந்தவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஜவ்வாதுமலை அருகே உள்ள நடுவூர் இருளம்பாறை பகுதியில் சின்னப்பையன் (வயது 68) என்பவர் வீட்டில் சோதனை செய்தனர்.
அங்கு உள்ள மாட்டுக்கொட்டகையில் உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கி மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து நாட்டுத் துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சின்னப்பையனை கைது செய்து போளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் வைத்தனர்.
Related Tags :
Next Story