சிங்கம்புணரி அருகே இருதரப்பினர் இடையே மோதல்; வீடுகள் மீது கல்வீச்சு கோட்டாட்சியர் தலைமையில் சமாதான கூட்டம்


சிங்கம்புணரி அருகே இருதரப்பினர் இடையே மோதல்; வீடுகள் மீது கல்வீச்சு  கோட்டாட்சியர் தலைமையில் சமாதான கூட்டம்
x
தினத்தந்தி 28 Feb 2023 12:15 AM IST (Updated: 28 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரி அருகே இருதரப்பினர் இடையே மோதலில் வீடுகள் மீது கல்வீசப்பட்டது.

சிவகங்கை

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி அருகேஇருதரப்பினர் இடையே மோதலில் வீடுகள் மீது கல்வீசப்பட்டது.

எதிர்ப்பு

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எஸ்.வி மங்கலத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு சமுதாயம் சார்பில் ராவாதாள் எனும் பெண்களால் வழிபடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு தரப்பினர் பொது இடத்தில் ராவாத்தாள் வழிபாடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்பினர் இடையே தகராறு செய்யப்பட்டது. வீடுகள் மீது கற்கள் வீசப்பட்டன.

இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. மேலும் ராவாத்தாள் வழிபாட்டுக் குழுவில் உள்ள 2 பேரின் விவசாய நிலங்களில் இருந்த மின்மோட்டார் சேதப்படுத்தப்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கூறி 50-க்கும் மேற்பட்டோர் எஸ்.வி.மங்கலம் பஸ் நிறுத்தம் அருகில் சாலை மறியல் செய்தனர்.

சமாதான கூட்டம்

இதுகுறித்து தகவல் கிடைத்தும் போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் மற்றும் போலீசார் மறியல் செய்தவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இந்நிலையில் இருதரப்பினரையும் அழைத்து கோட்டாட்சியர் பால்துரை தலைமையில் வட்டாட்சியர் சாந்தி முன்னிலையில் சமாதான கூட்டம் நடைபெற்றது. இதில் இந்த ஆண்டு ராவாத்தாள் அம்மன் வழிபாட்டை ஊர் பொது இடத்தில் வைத்து நடத்துவது,. வட்டகோவில் அருகே ராவாத்தாள் கோவில் அமைந்துள்ள கொட்டகை உட்புறம் உள்ள டியூப் லைட் தவிர எவ்வித அலங்கார விளக்குகள், ஒலி பெருக்கி வைக்க கூடாது. விழா நிகழ்ச்சிகளை 10 மணிக்குள் முடித்து விட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

மேலும் வைகாசி மாதம் நடைபெறும் அய்யனார் கோவில் திருவிழாவிற்கு கிராம முறைப்படியும் அனைத்து சமூகத்தினரும் இணைந்து திருவிழா நடத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.


Related Tags :
Next Story