இருதரப்பினர் இடையே மோதல்; 4 பேர் காயம்


இருதரப்பினர் இடையே மோதல்; 4 பேர் காயம்
x

இருதரப்பினர் இடையே மோதல்; 4 பேர் காயம்

திருவாரூர்

கொரடாச்சேரியை அடுத்த கிளரியம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் மதன்குமார் (வயது22). இவர் புத்தூரில் உள்ள தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் கொரடாச்சேரி நோக்கி சென்றுள்ளார். அப்போது இவரது மோட்டார் சைக்கிள் முன்பு புத்தூர் கிராமத்தை சேர்ந்த மதியழகன் மகன் பிருந்தேஷ் (24) என்பவர் சரக்கு வாகனத்தில் காய்கறி வியாபாரம் செய்து கொண்டு சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளுக்கு வழிவிடாமல் சென்றுள்ளார். இதனை மதன்குமார் தட்டிக்கேட்டார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் ஆயுதங்களால் தாக்கி கொண்டனர். இதில் காயமடைந்த மதன்குமார், பாஸ்கரன், அழகேசன், பிருந்தேஷ் ஆகியோர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் மதியழகன் (48), முருகானந்தம் (35) ஆகியோரை கொரடாச்சேரி போலீசார் கைது செய்தனர். மேலும் இ்தில் தொடர்புடைய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Related Tags :
Next Story