இருதரப்பினர் இடைேய மோதல்; 10 பேர் மீது வழக்கு


இருதரப்பினர் இடைேய மோதல்; 10 பேர் மீது வழக்கு
x

இருதரப்பினர் இடைேய மோதல்; 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

புதுக்கோட்டை

ஆலங்குடி அருகே உள்ள பாப்பான்பட்டியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் நடைபெற்ற கலைநிகழ்ச்சி தொடர்பாக இரு தரப்பினர் இடையே மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வம்பன் கடை வீதியில் 2 தரப்பினரும் இடையே இது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதில் படுகாயமடைந்த கண்ணன், துரையரசன் ஆகிய 2 பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதலில் 4½ பவுன் தங்க சங்கிலி காணாமல் போனதாகவும், மோட்டார் சைக்கிளின் முகப்பு விளக்கு சேதமடைந்துள்ளதாகவும் கூறி விஜயகுமார் என்பவர் ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், கொத்தக்கோட்டையை சேர்ந்த கண்ணன், பாப்பான்பட்டியை சேர்ந்த துரையரசன், சுதாகர், செல்லத்துரை, விக்னேஷ்வரன் ஆகிய 5 பேர் மீதும், மற்றொரு தரப்பினரான கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் பாப்பான்பட்டியை சேர்ந்த விஜயகுமார், முகிலன், சந்தோஷ், அகிலன், சிவா ஆகிய 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story