இருதரப்பினர் இடையே மோதல்; 11 பேர் மீது வழக்கு
இருதரப்பினர் இடையே மோதல்; 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே உள்ள ராயவரம் அடுத்துள்ள ஏ.செட்டிபட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் மணிமாறன், பன்னீர்செல்வம். இவர்கள் இருவரும் அருகருகே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு இடையே 3 சென்ட் நிலம் சம்பந்தமாக கடந்த 10 ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதையடுத்து நேற்று இந்த நிலப்பிரச்சினை சம்பந்தமாக மீண்டும் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் மரக்கட்டைகளால் கடுமையாக தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இதில் இரு தரப்பை சேர்ந்த 5 பேர் காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் 5 பேரும் திருமயம், புதுக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து இருதரப்பினரும் அரிமளம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் 11 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story