சின்னசேலம் அருகேஇருதரப்பினரிடையே மோதல்; 15 பேர் மீது வழக்கு
சின்னசேலம் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
சின்னசேலம்,
சின்னசேலம் அருகே உள்ள வினைதீர்த்தாபுரம் வடக்கு காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கலியன் மனைவி அஞ்சலை (வயது 45).இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் முருகேசன் என்பவருக்கும் இடையே நடைபாதை பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் உள்ளது. சம்பவத்தன்று கூலி வேலைக்கு சென்று திரும்பிய அஞ்சலையை முன்விரோதம் காரணமாக முருகேசன், முத்துசாமி, சுந்தரி, கலைச்செல்வி, சடையம்மாள், பிரியதர்ஷினி, பரஞ்சோதி உள்ளிட்ட 8 பேர் ஆபாசமாக திட்டி தாக்கினர். அப்போது தடுக்க முயன்ற இந்துமதி, பூங்காவனம் ஆகியோரையும் அந்த கும்பல் தாக்கியதாக தெரிகிறது. பதிலுக்கு அஞ்சலை, வெங்கடேசன், பழனிமுத்து, இந்துமதி, கனகா, கருப்பன் உள்ளிட்ட 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று சேர்ந்து முருகேசன் தரப்பினரை தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்த தனித்தனி புகார்களின் பேரில் இருதரப்பை சேர்ந்த 15 பேர் மீது சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிந்து, முத்துராமன், கோவிந்தன் ஆகியோரை கைது செய்தனர்.