இரு தரப்பினரிடையே மோதல்; 19 பேர் மீது வழக்கு


இரு தரப்பினரிடையே மோதல்; 19 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 20 April 2023 12:15 AM IST (Updated: 20 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே இரு தரப்பினரிடையே மோதல்; 19 பேர் மீது வழக்கு

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் அருகே உள்ள கொங்கம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ரஜினிசங்கர் மனைவி இந்து (வயது 22). இவருடைய தம்பி சூர்யா, ஒரு பெண்ணை காதலித்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்வதற்காக அழைத்துச்சென்றார். பின்னர் அவர்களை பெண்ணின் உறவினர்கள் கண்டுபிடித்து பிரித்து விட்டனர். இந்த முன்விரோதம் காரணமாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் திட்டி தாக்கிக்கொண்டனர். இந்த தாக்குதலில் இரு தரப்பையும் சேர்ந்த தளபதி, ரஜினிசங்கர், சந்தோஷ், ஹேமலதா மற்றும் ஆரவள்ளி, வள்ளி, ஹரி ஆகிய 7 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து இரு தரப்பினரும் தனித்தனியாக வளவனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். கொங்கம்பட்டை சேர்ந்த இந்து அளித்த புகாரின்பேரில் ராம்பாக்கத்தை சேர்ந்த முத்துக்குமரன், முத்துராம், நிர்மல்குமார், ராஜசேகர், தினேஷ்குமார் உள்ளிட்ட 10 பேர் மீதும், அதேபோல் ராம்பாக்கத்தை சேர்ந்த முத்துக்குமரன் அளித்த புகாரின்பேரில் கொங்கம்பட்டை சேர்ந்த தளபதி, சூர்யா, ரஜினிசங்கர், கண்ணன், அய்யப்பன் உள்ளிட்ட 9 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story