இருதரப்பினரிடையே மோதல்; பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு
கண்டன்விளை அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் பெண்ணிடம் 10 பவுன் நகை பறிக்கப்பட்டது. இதுதொடர்பாக 5 பெண்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திங்கள்சந்தை:
கண்டன்விளை அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் பெண்ணிடம் 10 பவுன் நகை பறிக்கப்பட்டது. இதுதொடர்பாக 5 பெண்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முன்விரோதம்
இரணியல் போலீஸ் சரகத்துக்குட்பட்ட கண்டன்விளை அருகே உள்ள பாலவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயன். இவருடைய மனைவி ஜெமிலாறோஸ் (வயது 45).
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அலெக்ஸ் மனைவி பியூட்டி ஸ்டார் (40) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
நகை பறிப்பு
இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டின் அருகே இருவருக்கும் இடையே தகராறு நடந்துள்ளது. இதனை பக்கத்து வீட்டை சேர்ந்த மேரிலதா (45) என்பவர் பியூட்டி ஸ்டாரிடம் தட்டி கேட்டுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த பியூட்டி ஸ்டார், மேரிலதாவை தகாத வார்த்தைகளால் பேசி கையை கடித்து காயப்படுத்தியுள்ளார். மேலும், அவரது கழுத்தில் கிடந்த 10 பவுன் தாலி சங்கிலியை பறித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
5 பேர் மீது வழக்கு
இதில் காயமடைந்த மேரிலதா குளச்சல் அரசு ஆஸ்பத்திாியில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து மேரி லதா இரணியல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் பியூட்டி ஸ்டார் மற்றும் எபின்ஷா (27), அமலோற்பம் (55) ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
அதேபோல் பியூட்டி ஸ்டாரும், தன்னை மேரிலதாவும், ஜெமீலா ரோசும் சேர்ந்து தக்கியதாக புகார் அளித்தார். அதன்பேரிலும் மேரிலதா, ஜமீலா ரோஸ் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.