இடப்பிரச்சினையில் மோதல்; பெண்கள் படுகாயம்-2 பேர் மீது வழக்கு


இடப்பிரச்சினையில் மோதல்; பெண்கள் படுகாயம்-2 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 14 Jun 2023 2:25 AM IST (Updated: 14 Jun 2023 9:58 AM IST)
t-max-icont-min-icon

இடப்பிரச்சினையில் ஏற்பட்ட மோதலில் பெண்கள் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தில் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அரியலூர்

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள சுத்தமல்லி கிராமத்தை சேர்ந்தவர் நீலமேகம்(வயது 53). விவசாயி. இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன்(40) என்பவருக்கும் இடப்பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று நீலமேகத்தின் மகன் மன்மதன் வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராஜேந்திரன், அவரது மனைவி சகுந்தலா(37) ஆகியோருக்கும், மன்மதன் மற்றும் அவரது அக்காள் கண்மணி ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தகாத வார்த்தையால் திட்டி, கட்டையால் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த கண்மணி, சகுந்தலா ஆகியோர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீசில் இரு தரப்பினரும் தனித்தனியே அளித்த புகாரின்பேரில் ராஜேந்திரன், மன்மதன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story