திடீரென ஏற்பட்ட புகைமூட்டத்தால் பரபரப்பு
நாகையில் திடீரென ஏற்பட்ட புகை மூட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகையில் திடீரென ஏற்பட்ட புகை மூட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
திடீர் புகைமூட்டம்
நாகையில் நேற்று வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மதியத்திற்கு மேல் நகர் பகுதியில் திடீரென புகை மூட்டம் பரவியது தொடர்ந்து மாலை வேலையில் மூடுபனி போல நாகை நகர் பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது.
ஒரு சில பகுதிகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத படி புகை மூட்டம் தென்பட்டது. இந்த புகை மூட்டத்தால் பல இடங்களில் பொதுமக்களுக்கு கண் எரிச்சலும் ஏற்பட்டது. நாகையில் எந்தவித வானிலை மாற்றமும் இல்லாமல் திடீரென ஏற்பட்டதால் பொதுமக்கள் இடையே அச்சம் ஏற்பட்டது..
பரபரப்பு
இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தொடர்ந்து புகார் சென்றது. இதையடுத்து தீயணைப்பு நிலைய அதிகாரிகள் நடத்திய விசாரணையில், நாகை அருகே காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 3 இரும்பு ஆலைகளில், இருந்து வெளியேறும் புகை, நாகை நகர் பகுதி வரை தென்பட்டது தெரிய வந்தது.
வழக்கத்தை விட நேற்று காற்று இல்லாததால் இந்த புகை மூட்டம் காரைக்காலில் இருந்து நாகை வரை பரவியதற்கு காரணம் என்று தீயணைப்பு நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். நாகை நகர் பகுதிகளில் திடீரென ஏற்பட்ட புகை மூட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.