ஒருங்கிணைந்த கோர்ட்டில் பாராட்டு விழா


ஒருங்கிணைந்த கோர்ட்டில் பாராட்டு விழா
x
தினத்தந்தி 8 Dec 2022 12:15 AM IST (Updated: 8 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஒருங்கிணைந்த கோர்ட்டில் பாராட்டு விழா நடந்தது.

மயிலாடுதுறை

சீர்காழி ஒருங்கிணைந்த சார்பு கோர்ட்டில் நீதிபதிகள் மற்றும் எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டு விழா நடந்தது. விழாவிற்கு வக்கீல் சங்க தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மூத்த வக்கீல்கள் செல்வராஜ், ரெங்கராஜ், சுந்தரய்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் நெடுஞ்செழியன் வரவேற்றார். விழாவில் சார்பு கோர்ட்டு அமைய உரிய நடவடிக்கை எடுத்த பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. சந்திரமோகன், புதிதாக சார்பு நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட மும்தாஜ், மாவட்ட நீதித்துறை நடுவர் ரங்கேஸ்வரி ஆகியோரை பாராட்டி சால்வை அணிவித்து வக்கீல் சங்கம் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. அப்போது பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கூறுகையில், 'விரைவில் மகிளா அல்லது விரைவு நீதிமன்றம் அமைய உரிய நடவடிக்கை எடுப்பேன்' என்றார். நிகழ்ச்சியில் வக்கீல்கள் சுவாமிநாதன், பாலாஜி, குமரேசன், அரசு வக்கீல் முத்துக்குமார், அப்துல்லாஷா, வி.பன்னீர்செல்வம், தியாகராஜன், வி. தியாகராஜன், கார்த்தி, ராதிகா, சுதா, கவிதா, கார்த்திகேயன் உள்ளிட்ட வக்கீல்கள் கலந்து கொண்டனர். முடிவில் சங்க பொருளாளர் ஞானபிரகாசம் நன்றி கூறினார்.


Next Story