செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர், வீரங்கனைகளுக்கு வாழ்த்துகள் - தேமுதிக தலைவர் விஜயகாந்த்
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர் வீராங்களைகளுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னை அருகே மாமல்லபுரத்தில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்க இருக்கும் நிலையில், இந்திய நாட்டில் அதுவும், தமிழகத்தில் தலைநகரான சென்னையில் இந்த போட்டி நடைபெறுவது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும், இந்தியர்களுக்கும் கிடைத்த பெருமை.
இந்த போட்டியில் கலந்து கொண்டுள்ள இந்தியர்கள் திறமையுடன் விளையாடி வெற்றி பெற்று நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும். 187 நாடுகளில் இருந்து தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு வந்துள்ள வீரர்கள், வீராங்கனைகளை தமிழகத்திற்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைவதுடன் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story