ராஜகலைஞன் விருது பெற்றவருக்கு வாழ்த்து
கூத்தாநல்லூரில் ராஜகலைஞன் விருது பெற்றவருக்கு வாழ்த்து
திருவாரூர்
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் லெட்சுமாங்குடியில் 18 ஆண்டுகளாக தையல் கலையில் பல பெண்களுக்கு இலவச பயிற்சி அளித்தும், வாடிக்கையாளர்களுக்கு சிறப்பாக ஆடைகளை வடிவமைத்து வழங்கி வருபவர் ரோமோ பேஷன் டிசைனர் கடையின் உரிமையாளர் உஷா புரோகித். இவரது சேவையை பாராட்ட இவருக்கு தமிழக பண்பாட்டு கழகத்தின் சார்பில், திருச்சியில் நடந்த விழாவில் ராஜ கலைஞன் விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தமிழக பண்பாட்டு கழக நிறுவனர் ஜாகிர் உசேன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசினார். கூத்தாநல்லூரில் நடந்த நிகழ்ச்சியில் ராஜகலைஞன் விருது பெற்ற உஷா புரோகித்துக்கு கூத்தாநல்லூர் வி.எ.தாஜ்தீன், லெட்சுமாங்குடி கே. ஜெயந்த், கே.எழிலன்பன் மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
Related Tags :
Next Story