எவரெஸ்ட் மாரியப்ப நாடார் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
பொதுத்தேர்வில் சாதனை படைத்த எவரெஸ்ட் மாரியப்ப நாடார் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப் பள்ளியில் 240 மாணவர்கள் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினார்கள். இவர்களில் 238 பேர் வெற்றி பெற்றனர். இது 99 சதவீத வெற்றியாகும். மாணவி ராஜ சுகன்யா 573 மதிப்பெண்கள் எடுத்து முதலிடமும், மாணவர் பேச்சிமுத்து 539 மதிப்பெண்கள் பெற்று 2-வது இடமும், மாணவர் முத்துசிங்கம் மற்றும் லட்சுமி பிரபா 536 மதிப்பெண்கள் பெற்று 3-வது இடமும் பிடித்தனர்.
229 பேர் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினார்கள். இதில் 227 பேர் வெற்றி பெற்றனா். இது 99 சதவீத வெற்றியாகும். மாணவி சங்கீதா அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றார். மாணவி சுப்புலட்சுமி 463 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், சரமாரி 460 மதிப்பெண்கள் பெற்று 2-வது இடமும், மகாசக்தி 458 மதிப்பெண்கள் பெற்று 3-வது இடமும் பிடித்தனர்.
சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தலைவர் மற்றும் செயலாளர் அய்யனார் பாராட்டி கேடயங்கள் பரிசளித்தார். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் வெங்கடேசன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.