ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு


ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு
x

மாவட்ட அளவில் நடந்த ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஓவியத்தில் திறமையுள்ள குழந்தைகளை கண்டறியும் வகையில் மாவட்டத்தில் சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் குழந்தைகள் இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கு மாவட்ட அளவில் சித்திர பாடம் போட்டி (ஓவிய போட்டி) உலக அமைதிக்கான குழந்தைகளின் பங்கு என்ற தலைப்பில் நடத்தப்பட்டது.

திருவண்ணாமலை அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்தில் நடைபெற்ற இப்போட்டியில் 41 குழந்தைகள் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் குழந்தைகள் தங்களின் புதுவிதமான கருத்துக்களை ஓவியத்தின் மூலம் வெளிப்படுத்தினர். சண்முகா தொழிற்சாலை மேல்நிலைப்பள்ளியின் ஓவிய ஆசிரியர் திருமுருகன் இறுதி பட்டியலை தயாரித்தார்.

இதில் டி.டி.எச். பெண்கள் இல்லத்தில் இருந்து பிரியதர்ஷினி என்ற மாணவி முதலிடமும், நிர்மலா குழந்தைகள் இல்லத்தில் இருந்து புவனேஸ்வரி என்ற மாணவி 2-ம் இடத்தையும் பிடித்தனர்.

அவர்கள் இருவருக்கும் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story