வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு


வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
x

வெற்றி பெற்ற மாணவர்களை அனைவரும் பாராட்டினர்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூரில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் பங்கேற்ற மாவட்ட அளவிலான ஜூடோ போட்டி நடைபெற்றது. இந்த போட்டிகளை தி.மு.க. நகர செயலாளர் அய்யாவு பாண்டியன், தி.மு.க. கவுன்சிலர் கவுசல்யா சுரேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர் பள்ளி முதல்வர் முருகன் முன்னிலை வகித்தார். ஜூடோ பயிற்சியாளர் வினோத் செபஸ்டியான் மற்றும் சென்ஸாய் செபஸ்டியான் ஆகியோர் வரவேற்றனர். பயிற்சிக்கு நடுவராக தென்னிந்திய ஜூடோ மூத்த தலைமை பேச்சாளர் ராஜகோபால் மற்றும் புக்கா ஜூடோ பயிற்சி மையத்தின் தலைமை பயிற்சியாளர் இஸ்மாயில் ஆகியோர் செயல்பட்டனர். மாவட்ட அளவில் நடைபெற்ற இந்த போட்டியில் 200-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற மாணவர்களை அனைவரும் பாராட்டினர்.



Next Story