ஆணழகன் போட்டியில் வெற்றிபெற்றவருக்கு வாழ்த்து
ஆணழகன் போட்டியில் வெற்றிபெற்றவருக்கு மாவட்டக்குழு துணைத்தலைவர் பாராட்டு. வாழ்த்து
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கரிக்கல் ஊராட்சி வீரமுத்தூர் கிராமத்தில் வசிப்பவர் விஜயா. கூலித் தொழிலாளி. இவரது மகன் குணசேகரன். இவர் கடந்த வாரம் ராணிப்பேட்டையில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் மூன்றாவது இடமும், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட அளவில் நடைப்பெற்ற பேட்டியில் முதல் இடமும் பிடித்து வெற்றி பெற்றார்.
அதைத்தொடர்ந்து அவர் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத்தலைவர் நாகராஜ், சோளிங்கர் மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளர் பூர்ணசந்தர், மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை சந்தித்து மெடல், சான்றிதழ் மற்றும் கோப்பையை காண்பித்து வாழ்த்து பெற்றார்.
அப்போது மாநில அளவில் நடைபெற உள்ள ஆணழகன் பேட்டியில் கலந்து கொள்ள இருப்பதாக அவர் தெரிவித்தார். இந்த போட்டியில் பங்கேற்பதற்கு தேவையான உதவியை மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் நாகராஜ் வழங்கினார். மேலும் தமிழக அளவில் வெற்றி பெற்று ராணிப்பேட்டை மாவட்டத்திற்கும், சோளிங்கருக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்தினார். வழக்கறிஞர் உதயகுமார், விராமுத்தூர் கிளைச் செயலாளர் ரமேஷ், செயற்குழு உறுப்பினர் பாபு ஆகியோர் உடனிருந்தனர்.