கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு


கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு
x

கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களை பாராட்டினர்.

விருதுநகர்

சாத்தூர்,

சாத்தூரில் மாநில வளர்ச்சியில் காவல்துறையின் பங்கு என்ற தலைப்பில் கட்டுரை போட்டி, காவல்துறையின் பணி என்ற தலைப்பில் ஓவியப்போட்டியும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நடைபெற்றது. வீரார்பட்டி, சின்னக்காமன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் சாத்தூர் இந்து நாடார்எட்வர்டு மேல்நிலைப்பள்ளியில் போலீசார் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கட்டுரை போட்டி மற்றும் ஓவியப்போட்டிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சிக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜன் தலைமை வகித்தார். சாத்தூர் நகர் இன்ஸ்பெக்டர் செல்லபாண்டியன் முன்னிலை வகித்தார். இதில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் முருகேசன் செய்திருந்தார்.



Next Story