காங்கிரசார் 5 நாட்கள் பாதயாத்திரை


காங்கிரசார் 5 நாட்கள் பாதயாத்திரை
x

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதையொட்டி காங்கிரசார் சார்பில் நடக்கும் 5 நாட்கள் பாதயாத்திரையை ராஜகுமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

மயிலாடுதுறை

பொறையாறு:

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதையொட்டி காங்கிரசார் சார்பில் நடக்கும் 5 நாட்கள் பாதயாத்திரையை ராஜகுமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

பவள விழா ஆண்டு

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் (பவள விழா) ஆவதையொட்டி அதற்கான விழாவை இந்த ஆண்டு இல்லம்தோறும் கொடியேற்றி சிறப்பாக கொண்டாட மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்துள்ளன.இதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் கட்சி சார்பில் மயிலாடுதுறை மாவட்டம், பொறையாறு அருகே தில்லையாடி கிராமத்தில் உள்ள தியாகி தில்லையாடி வள்ளியம்மை நினைவு மணிமண்டபத்தில் இருந்து பாதயாத்திரையை தொடங்கினர். இதனை ராஜகுமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். முன்னதாக தில்லையாடி வள்ளியம்மை சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மேலும் காந்தியடிகள் அமர்ந்த இடத்திலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

5 நாட்கள் பாதயாத்திரை

இந்திய தேசத்தின் விடுதலைக்காக போராடிய தலைவர்களை நினைவு கூறும் வகையில் அவர்களது உருவப்படத்துடன் தொடங்கிய இந்த பாதயாத்திரை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறுகிறது. இந்த பாதயாத்திரை குத்தாலம், மணல்மேடு, கொள்ளிடம் செல்கிறது. 14-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) கொள்ளிடத்தில் இருந்து மாதானம் வழியாக சீர்காழி வந்தடைகிறது. சீர்காழியில் தலைவர்கள் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய பின்னர் புதுப்பிக்கப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் மண்டபத்தை ராஜகுமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்து பவளவிழா நினைவு கொடியினை ஏற்றி வைக்கிறார்.இதில், மாநில செயலாளர் கனிவண்ணன், மாவட்ட செயலாளர் பண்ணை சொக்கலிங்கம், தமிழ்நாடு பொதுக்குழு உறுப்பினர்கள் சரத் சந்திரன், ஜம்புகென்னடி, சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் நவாஸ், மகளிர் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.


Next Story