ஆத்தூர் நகராட்சி கூட்டத்தில் காங்கிரஸ் கவுன்சிலர்கள் வெளிநடப்பு
சேலம்
ஆத்தூர்:-
ஆத்தூர் நகராட்சி கூட்டம் பெரியார் மண்டபம் கூடத்தில் நகராட்சி தலைவர் நிர்மலா பபிதா தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் கவிதா ஸ்ரீ ராம், ஆணையாளர் சுகந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு கருப்பு பேட்ஜ் அணிந்து வந்த காங்கிரஸ் கவுன்சிலர்கள் செந்தில்குமார், தேவேந்திரன் ராகுல் காந்தி சிறை தண்டனை, பதவி பறிப்பை எதிர்த்து சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து நகராட்சியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது சில பிரச்சினைகள் தொடர்பாக தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கூட்டத்தில் மொத்தம் 82 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கவுன்சிலர்கள் ராஜேஷ்குமார், வக்கீல் சுந்தரம், சம்பத், பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story