காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
தேனியில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
தேனி என்.ஆர்.டி. நகரில் தேனி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் துணை அமைப்புகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கி பேசினார். மாநில செயலாளரும், மாவட்ட தேர்தல் பொறுப்பாளருமான இளங்கோவன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில், ராகுல் காந்தியின் நடைபயணம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தும், அகில இந்திய காங்கிரஸ் புதிய தலைவராக தேர்வான மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வாழ்த்து தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் புதிதாக காங்கிரஸ் கொடிகம்பங்கள் நடவு செய்து கொடியேற்றும் விழா நடத்துவது தொடர்பாகவும் ஆலோசனை செய்யப்பட்டது. இதில் மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியம், துணைத்தலைவர்கள் சன்னாசி, கருப்பசாமி, மாவட்ட மகளிரணி தலைவி கிருஷ்ணவேணி மற்றும் மாவட்ட, நகர, வட்டார நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.