காங்கிரஸ் கொடியேற்றுவிழா
ராகுல்காந்தி நடைபயண 100-வது நாளையொட்டி நடந்த காங்கிரஸ் கொடியேற்றுவிழாவில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
தட்டார்மடம்:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. ஒற்றுமையை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து நடைபயணத்தை தொடங்கினார். பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வரும் அவரது நடைபயண 100-வது நாளையொட்டி சாத்தான்குளம் தெற்கு வட்டார காங்கிரஸ் சார்பில் சொக்கன்குடியிருப்பில் காங்கிரஸ் கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவுக்கு தெற்கு வட்டாரத் தலைவர் லூர்து மணி தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ் முன்னிலை வகித்தார். கிராம கமிட்டித் துணைத் தலைவர் அந்தோணி சந்திரபோஸ் வரவேற்றார். இதில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கட்சி கொடியேற்றி கல்வெட்டை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இதில் சாத்தான்குளம் வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் பார்த்தசாரதி, மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் சக்திவேல் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.