'காங்கிரஸ் ஒரு தலைவரை கண்டுபிடிக்க முடியாத கட்சி' எச்.ராஜா பேட்டி


காங்கிரஸ் ஒரு தலைவரை கண்டுபிடிக்க முடியாத கட்சி  எச்.ராஜா பேட்டி
x

‘காங்கிரஸ் ஒரு தலைவரை கண்டுபிடிக்க முடியாத கட்சி’ என்று பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கூறினார்.

ஈரோடு

புஞ்சைபுளியம்பட்டி

'காங்கிரஸ் ஒரு தலைவரை கண்டுபிடிக்க முடியாத கட்சி' என்று பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கூறினார்.

பிரதமர் படம்

புஞ்சைபுளியம்பட்டியில் இந்து முன்னணி சார்பில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கலந்துகொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

ரேஷன் கடைகளில் பிரதமர் படம் வைக்க வேண்டும் என்ற மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனின் பேச்சு நியாயமானது. 38 ரூபாய்க்கு அரிசியை விலை கொடுத்து வாங்கி 2 ரூபாய்க்கு மாநிலங்களுக்கு மத்திய அரசு கொடுக்கிறது.

பரந்தூர் விமான நிலையம்

அண்ணாமலையை பார்த்து உதை கொடுப்போம் என ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியது கண்டிக்கத்தக்கது. ஒருமுறை முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியை பற்றி பேசி அவரே மன்னிப்பு கேட்டதை நாடறியும். காங்கிரஸ் ஒரு தலைவரை கண்டுபிடிக்க முடியாத கட்சி. நாடு வளர்ந்து கொண்டிருக்கிறது. சென்னை-சேலம் 8 வழி சாலை வேண்டாம் என்று சொன்னவர்கள் தற்போது வேண்டுமென சொல்கிறார்கள். பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான திட்டம் யாரையும் பாதிக்காமல் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story