வடக்கன்குளத்தில் காங்கிரசார் பாதயாத்திரை


வடக்கன்குளத்தில் காங்கிரசார் பாதயாத்திரை
x

மத்திய பா.ஜ.க. ஆட்சியின் விலைவாசி உயர்வை கண்டித்து வடக்கன்குளத்தில் காங்கிரசார் பாதயாத்திைர சென்றனர்.

திருநெல்வேலி

வடக்கன்குளம்:

மத்திய பா.ஜ.க. அரசின் விலைவாசி உயர்வை கண்டித்தும், இதுகுறித்து மக்களிடம் எடுத்துரைக்கும் வகையிலும், வடக்கன்குளம் காந்தி சதுக்கத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியினர் பாத யாத்திரையை தொடங்கினர். இதை முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பாதயாத்திரையாக சென்றவர்கள், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து கோஷங்களை எழுப்பியபடி சென்றனர். இந்த பாத யாத்திரை பேரணியானது ராதாபுரம், நாங்குநேரி, அம்பை ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் அடங்கிய பணகுடி, வள்ளியூர், ஏர்வாடி, களக்காடு, சேரன்மாதேவி, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி போன்ற பகுதிகள் வழியாக சென்று அம்பையில் நிறைவடைகிறது. நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. ராமசுப்பு, வள்ளியூர் யூனியன் துணைத்தலைவர் வெங்கடேஷ் தன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story