ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் வாயில் பூட்டுப்போட்டு கருப்பு துணி கட்டி மவுன போராட்டம்


ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் வாயில் பூட்டுப்போட்டு கருப்பு துணி கட்டி மவுன போராட்டம்
x

ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் வாயில் பூட்டுப்போட்டு கருப்பு துணி கட்டி மவுன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு

ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் வாயில் பூட்டுப்போட்டு கருப்பு துணி கட்டி மவுன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மவுன போராட்டம்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்ததற்கு நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மேலும், அவரது எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்ததற்கும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. காங்கிரஸ் கட்சியினர் ரெயில் மறியல், ஆர்ப்பாட்டம், மனித சங்கிலி என தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் ராகுல்காந்தியின் மீது கொடுக்கப்பட்ட பொய் வழக்கை கண்டித்தும், அந்த வழக்கின் தீர்ப்பையொட்டி உடனடியான எம்.பி. பதவியை தகுதி இழப்பு செய்ததை கண்டித்தும் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மவுன போராட்டம் ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை பகுதியில் நேற்று நடைபெற்றது.

பூட்டுடன் கருப்பு துணி

இதில் காங்கிரஸ் கட்சியினர் தங்களது வாயில் கருப்பு துணியை கட்டி கொண்டு மவுன போராட்டத்தில் ஈடுபட்டனர்.. மேலும், சுதந்திரமான கருத்து தெரிவிக்க தடை விதிப்பதை கண்டித்து மாவட்ட துணைத்தலைவர் ராஜேஷ் ராஜப்பா பூட்டுடன் கூடிய கருப்பு துணியை வாயில் கட்டிகொண்டு போராட்டத்தில் பங்கேற்றார்.


Related Tags :
Next Story