சுதந்திர தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் நடைபயணம்
சுதந்திர தினத்தை முன்னிட்டு நத்தத்தில் காங்கிரஸ் கட்சியினர் நடைபயணம் சென்றனர்.
திண்டுக்கல்
காங்கிரஸ் கட்சி சார்பில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் நடைபயணம் செல்ல முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பல்வேறு மாநிலங்களில் காங்கிரசார் நடைபயணத்தை தொடங்கியுள்ளனர்.
இதேபோல் திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபயணம் தொடக்க விழா, நத்தத்தில் இன்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் அப்துல்கனிராஜா தலைமை தாங்கினார். அப்போது நத்தத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கட்சியினர் நடைபயணத்தை தொடங்கினர்.
இந்த நடைபயணம் நத்தத்தை தொடர்ந்து நிலக்கோட்டை, ஆத்தூர், திண்டுக்கல் வரை செல்கிறது. இதில், நகர தலைவர் முகமது அலி, வட்டார தலைவர்கள் பழனியப்பன், ராஜ்கபூர், செல்வம், தொழிற்சங்க நிர்வாகிகள் கருப்பையா, இதிரீஸ் உள்ளிட்ட வட்டார, நகர, நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story