சாலையை சீரமைக்கக்கோரி காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம்


சாலையை சீரமைக்கக்கோரி காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம்
x

சாலையை சீரமைக்கக்கோரி காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம் நடத்தினர்.

கன்னியாகுமரி

திருவட்டார்,

சாலையை சீரமைக்கக்கோரி காங்கிரஸ் கட்சியினர் வேர்க்கிளம்பியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரதம்

ஆற்றூர் முதல் அழகியமண்டபம் வரை உள்ள சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இந்த சாலையை சீரமைக்கக் கோரி திருவட்டார் கிழக்கு வட்டார காங்கிரஸ் சார்பில் நேற்று வேர்க்கிளம்பி சந்திப்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. வட்டார காங்கிரஸ் தலைவர் ஜெகன்ராஜ் தலைமை தாங்கினார்.

போராட்டத்தை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால்சிங் தொடங்கி வைத்தார்.

கலந்து கொண்டவர்கள்

மாநில குழு உறுப்பினர்கள் ரெத்தினகுமார், மாவட்ட கவுன்சிலர்கள் செலின்மேரி, சர்மிளா ஏஞ்சல், ஜோபி, வேர்க்கிளம்பி பேரூராட்சி தலைவர் சுஜீர் ஜெபசிங்குமார், மாவட்ட வக்கீல் பிரிவு தலைவர் ஏசுராஜா, திருவட்டார் வட்டார சிறுபான்மை பிரிவு தலைவர் ஜாண் வெர்ஜின், காட்டாத்துறை ஊராட்சி தலைவர் இசையாஸ், கண்ணனூர் ஊராட்சி கவுன்சிலர் கிறிஸ்டின் ஜோண், மாவட்ட செயலாளர் வர்க்கீஸ், நிர்வாகிகள் ஒஸ்டின் ஞானஜெகன், ஜாண் இக்னேசியஸ், சேம் மார்ட்டின், ஜெபா, ஜஸ்டின், டாம் டிக்சன், ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story