வேலூரில் காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை


வேலூரில் காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை
x

வேலூரில் காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை நடத்தினர்.

வேலூர்

இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தினவிழா வருகிற 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் பாதயாத்திரை நடந்தது. அதன்படி வேலூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பாதயாத்திரை வேலூரை அடுத்த பிள்ளையார்குப்பத்தில் இருந்து நேற்று காலை தொடங்கியது. பாதயாத்திரைக்கு மாநகர மாவட்ட தலைவர் டீக்காராமன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பெருமுகை, புதுவசூர், அலமேலுமங்காபுரம், சத்துவாச்சாரி, காகிதப்பட்டறை, சைதாப்பேட்டை, அண்ணாசாலை, வேலப்பாடி, பாகாயம், தொரப்பாடி, பெரியஅல்லாபுரம், டோல்கேட் வழியாக பாதயாத்திரை சென்று வேலூர் கோட்டை காந்திசிலை அருகே நிறைவடைந்தது. சுமார் 25 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற பாதயாத்திரையின்போது கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பா.ஜ.க. ஆட்சியால் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் உள்ளிட்டவற்றால் பொருளாதார பேரழிவில் இந்தியா சிக்கி உள்ளது. நாட்டின் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் பா-.ஜ.க. வெளியேற வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினார்கள்.


Next Story