காங்கிரஸ் கட்சியினர் பாத யாத்திரை


காங்கிரஸ் கட்சியினர் பாத யாத்திரை
x

சேத்துப்பட்டு வழியாக காங்கிரஸ் கட்சியினர் பாத யாத்திரை நடந்தது.

திருவண்ணாமலை

சேத்துப்பட்டு

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து கடந்த 9-ந் தேதி கண்ணமங்கலத்தில் பாதயாத்திரை தொடங்கியது. தொடர்ந்து சேவூர், குன்னத்தூர், ஆரணி, விண்ணமங்கலம் வழியாக இன்று சேத்துப்பட்டு வந்தடைந்தது.

சேத்துப்பட்டு ஆரணி சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்து மீண்டும் பாதயாத்திரை தொடங்கியது. பஸ் நிலையம் அருகே திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் அண்ணாமலை, மாநில பொதுச் செயலாளர் வந்தவாசி வசந்தராஜ் ஆகியோர் காங்கிரஸ் கட்சி கொடியை ஏற்றி வைத்தனர்.

அங்கிருந்து பாத யாத்திரை சென்றது. பின்னர் சேத்துப்பட்டு நான்கு முனை சந்திப்பில் மத்திய அரசை கண்டித்து பேசினார்கள்.

தொடர்ந்து பாதயாத்திரை வந்தவாசி, சாலையில் மழையூர், நோக்கி சென்றது. முன்னதாக சேத்துப்பட்டு பஸ் நிலையம், நான்கு முனை சந்திப்பு, காமராஜர் சிலை மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்கள், அனைத்து கடைகளிலும், ஜி.எஸ்.டி.வரி எதிர்ப்பு தெரிவித்து துண்டு பிரசுரங்கள் வழங்கினார்கள்.

பாதயாத்திரையில் மாவட்ட துணைத்தலைவர்கள் அன்பழகன், தசரதன், சேத்துப்பட்டு நகர தலைவர் ஜாபர் அலி, மற்றும் ஒன்றிய, நகர, நிர்வாகிகள் பொறுப்பாளர்கள், மகளிர் அணியினர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story