காங்கிரஸ் கட்சியினர் பாத யாத்திரை


காங்கிரஸ் கட்சியினர் பாத யாத்திரை
x

சாயர்புரத்தில் காங்கிரஸ் கட்சியினர் பாத யாத்திரை சென்றனர்.

தூத்துக்குடி

சாயர்புரம்:

சாயர்புரத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக பாதயாத்திரை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சாயர்புரம் நகர காங்கிரஸ் தலைவர் ஜேக்கப் தலைமை தாங்கினார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி காங்கிரஸ் தலைவர் இசை சங்கர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பாதயாத்திரையை தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் சங்கர் தொடங்கி வைத்தார். பேரணி நடுவக்குறிச்சி, கல்லூரி சாலை, சாயர்புரம் பஜார் வந்தடைந்தது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story