காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டம்


காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டம்
x

சேரன்மாதேவியில் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள்.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

சேரன்மாதேவியில் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், அறவழி உண்ணாவிரத போராட்டம் நடந்தது. ராகுல் காந்தி எம்.பி. பதவி நீக்கத்தை கண்டித்து இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் மாநகர் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன், சேரன்மாதேவி வட்டார தலைவர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story