காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
குடியாத்தத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
குடியாத்தம்
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை அமலாக்கத்துறையினர் விசாரணை என்ற பெயரில் அழைத்து துன்புறுத்தி வரும் பா.ஜ.க. அரசை கண்டித்து வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று குடியாத்தம் நகராட்சி வளாகத்தில் உள்ள காந்தி சிலை எதிரே அறவழி சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது.
வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார்.
வட்டார தலைவர்கள் சங்கர், வாசு, லோகிதாஸ், ஜோதி கணேசன், விஜயகுமார், பேர்ணாம்பட்டு நகர தலைவர் முஜம்மில் அஹமத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குடியாத்தம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரங்கநாதன் வரவேற்றார்.
இதில் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் கிருபானந்தம், மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் கிருஷ்ணவேணி, நகரமன்ற உறுப்பினர் விஜயன், அக்பர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முடிவில் ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி தலைவர் வீராங்கன் நன்றி கூறினார்.