காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக கவர்னரை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக கவர்னரை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டம்

தமிழக கவர்னரை கண்டித்து திருவண்ணாமலையில் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர் தலைவர் வெற்றிச்செல்வம் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்த்தில் இந்திய அரசியல் அமைப்பிற்கு எதிராக செயல்படுவதாக தமிழக கவர்னர் ரவியை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் புருஷோத்தமன், மாவட்ட பொதுச் செயலாளர் கதிர்காமன், மாவட்ட விவசாயிகள் அணி தலைவர் சீனிவாசன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் வடிவழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆரணி

ஆரணி நகர காங்கிரஸ் கட்சி சார்பில் பழைய பஸ் நிலையம் எம்.ஜி.ஆர். சிலை முன்பாக தவணி வி.பி.அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நகர தலைவர் ஜெ.பொன்னையன் அனைவரையும் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாநில பொதுச் செயலாளருளான அருள் அன்பரசு கலந்து கொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நகரசபை உறுப்பினர் எஸ்.டி.செல்வம், நகரசபை உறுப்பினர் மருதேவி பொன்னையன், நகர பொதுச் செயலாளர் தாவூத் ஷரீப், நகர இளைஞரணி நிர்வாகி பிரபு, சேத்துப்பட்டு இளைஞர் காங்கிரஸ் தலைவர் கோகுல், மாவட்ட பொதுச் செயலாளர் உதயகுமார், முன்னாள் நகரத்தலைவர் சம்பந்தம், நிர்வாகி தசரதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செங்கம்

செங்கம் புதிய பஸ் நிலையம் அருகே அம்பேத்கர் சிலை முன்பு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் செங்கம் ஜி.குமார் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மாரி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன், சுப்ரமணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இ்தில் மாவட்ட, வட்டார, நகர நிர்வாகிகள் உள்பட காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு கவர்னரை திரும்ப பெற வேண்டும் எனவும், கவர்னருக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.


Next Story