அக்னிபத் திட்டத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
அக்னிபத் திட்டத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்ஸ நடத்தினர்.
வேலூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அக்னிபத் திட்டத்தை கண்டித்து வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் டீக்காராமன் தலைமை தாங்கினார். சிறுபான்மைபிரிவு மாவட்ட தலைவர் வாகித்பாஷா, ஓ.பி.சி. பிரிவு மாவட்ட தலைவர் நோபிள் லிவிங்ஸ்டன், எஸ்.சி. எஸ்.டி. பிரிவு மாவட்ட தலைவர் தங்கமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேரும் இளைஞர்களின் எதிர்காலம் 4 ஆண்டுகளுக்கு பின்னர் கேள்விக்குறியாகும். ராணுவத்தில் பணிபுரிய வேண்டும் என்று நினைக்கும் இளைஞர்களின் கனவு சிதைக்கப்படும். இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதில், மண்டல தலைவர்கள் ரகு, ஜான்பீட்டர், அசோக் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கட்சி நிர்வாகி துளசிராமன் நன்றி கூறினார்.