திருச்செந்தூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


திருச்செந்தூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

திருச்செந்தூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை கண்டித்து திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் சார்பில் பகத்சிங் பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். வட்டாரத் தலைவர்கள் சற்குரு, பாலசிங், தெற்கு மாவட்ட விவசாய பிரிவு தலைவர் வேல் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவசுப்பிரமணியன், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் சிந்தியாஉள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story