மருங்கூர் தபால் நிலையத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகை ; 102 பேர் கைது


மருங்கூர் தபால் நிலையத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகை ; 102 பேர் கைது
x
தினத்தந்தி 21 April 2023 12:15 AM IST (Updated: 21 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மருங்கூர் தபால் நிலையத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டனர். இததொடர்பாக 102 பேர் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி

அஞ்சுகிராமம்,

மருங்கூர் தபால் நிலையத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டனர். இததொடர்பாக 102 பேர் கைது செய்யப்பட்டனர்.

காங்கிரஸ் கட்சியினர் முற்றுகை

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து மருங்கூர் தபால் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடந்தது. இதற்கு கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி. உதயம் தலைமை தாங்கினார். வட்டார தலைவர்கள் காலப்பெருமாள், வக்கீல் சாம் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முற்றுகை போராட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் சாம் மோகன் ராய் மாவட்ட பொது செயலாளர் கிங்ஸ்டன், அழகப்பபுரம் பேரூராட்சி துணைத் தலைவர் ஆண்ட்ரூஸ் மணி, கவுன்சிலர் ஜஸ்டின், கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் அருண் டிசாசோ, மயிலாடி நகர காங்கிரஸ் தலைவர் நடேசன், மருங்கூர் நகர காங்கிரஸ் தலைவர் ஹெலன், மகளிர் காங்கிரஸ் நிர்வாகி தங்கம் நடேசன் வட்டாரத் துணைத் தலைவர் நடராஜன், வட்டார பொருளாளர் நாகராஜன், தாழக்குடி பேரூராட்சி துணைத் தலைவர் ராஜா, அழகப்பபுரம் பேரூர் விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தலைமையில் சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், அஞ்சுகிராம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 32 பெண்கள் உள்பட 102 பேரை கைது செய்தனர். பின்னர் அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். மாலை 6.15 மணிக்கு அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.


Next Story