களம்பூரில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ெரயில் மறியல் போராட்டம்
களம்பூரில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ெரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆரணி
களம்பூரில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ெரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி எம்.பி.பதவியை இழந்த விஷயத்தில் மத்திய அரசின் செயல்பாடுகளை கண்டிக்கும் வகையில் ஆரணியை அடுத்த களம்பூரில் உள்ள ஆரணி ரோடு ெரயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தலைவர் தவணி வி.பி. அண்ணாமலை தலைமையில் கட்சியினர் நேற்று காலை 7.15 மணியளவில் சென்றனர். அப்போது காட்பாடியில் இருந்து விழுப்புரம் செல்லும் ரெயில் காலை 7.40 மணிக்கு வந்தது. அந்த ெரயில் முன்பு கையில் பதாகைகளை ஏந்தியும் கோஷங்கள் எழுப்பியும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் களம்பூர் நகர கரங்கிரஸ் தலைவர் கே.வி.பழனி, ஆரணி நகர தலைவர் ஜெ.பொன்னையன், மாவட்ட துணைத் தலைவர்கள் எஸ். அன்பழகன், ஆர்.தசரதன், பழனி, சக்கரவர்த்தி, மாஸ்கர் பாஷா உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
போலீசார் நான்கு பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டுமென தெரிவித்தனர் அப்போது மாவட்ட தலைவர் போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சுமார் 20 பேரை உள்ளே அழைத்துச் சென்று ெரயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார். மற்றவர்கள் வெளியே நின்று இருந்தனர். ெரயில் மறியல் முடித்து வெளியே வந்ததும் 20 பேரையும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். பின்னர் சிறிது நேரத்திலேயே விடுவித்தனர்.