மானூரில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்


மானூரில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
x

மானூரில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டார்.

திருநெல்வேலி

மானூர்:

மானூர் தபால் நிலையம் முன்பாக நேற்று நெல்லை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராகுல்காந்தி எம்.பி. பதவி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் பாக்கிய குமார், மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன், மாவட்ட துணைத்தலைவர் சிவன் பெருமாள், சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சகுந்தலா ராமகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் எம்.பி. ராமசுப்பு ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட பொதுச்செயலாளர் கிருஷ்ணன், கிருஷ்ணன், கணேஷ், கே.எஸ்.மணி உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் கவிப்பாண்டியன் நன்றி உரையாற்றினார்.



Next Story