தூத்துக்குடியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி:
ராகுல்காந்தியை விசாரணைக்கு அழைத்த அமலாக்கதுறையை கண்டித்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வருமான வரி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ சுடலையாண்டி, மாநகராட்சி கவுன்சிலர்கள் சந்திரபோஸ், எடிண்டா, கற்பககனி சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஐ.என்.டி.யு.சி. மாநில செயற்குழு உறுப்பினர் ராஜ், மாநில செயலாளர் சுடலை, மண்டல தலைவர்கள் ஜசன்சில்வா, சேகர், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் சகாயராஜ், வடக்கு மாவட்ட தலைவர் ராகுல், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி தனலட்சுமி, மாவட்ட சேவாதளம் பிரிவு தலைவர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story