காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்


காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 March 2023 12:15 AM IST (Updated: 27 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரத்தில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தென்காசி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரத்தில் பஸ்நிலையம் அருகே கீழப்பாவூர் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மீதான பொய் வழக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் குமார் பாண்டியன் தலைமை தாங்கினார். ஐ.என்.டி.யூ.சி. பொதுச் செயலாளர் வைகுண்டராஜா, மாவட்ட துணைதலைவர் செல்வன், கீழப்பாவூர் நகர காங்கிரஸ் தலைவர் சிங்ககுட்டி (எ) குமரேசன், கீழப்பாவூர் பேருராட்சி துணை தலைவர் ராஜசேகர், யூனியன் துணை தலைவர் முத்துகுமார், மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட மனித உரிமை தலைவர் ராஜா ராம், மாவட்ட ஐ.என்.டி.யூ.சி. செயலாளர் மதியழகன், முன்னாள் யூனியன் கவுன்சிலர்கள் துரைசாமி, துரைபாண்டியன், இலக்கிய அணி பொன் கணேசன், கீழப்பாவூர் பேருராட்சி கவுன்சிலர்கள் இசக்கிராஜ், கோடீஸ்வரன், அன்பழகு சின்ன ராஜா மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story