காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்


காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 March 2023 12:15 AM IST (Updated: 29 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வாசுதேவநல்லூரில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தென்காசி

சிவகிரி:

ராகுல்காந்தி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து வாசுதேவநல்லூரில் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழைய தீயணைப்பு நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைந்த வாசுதேவநல்லூர் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவரும், ராமநாதபுரம் பஞ்சாயத்து தலைவருமான மகேந்திரன் தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட ஓ.பி.சி. அணித் தலைவர் திருஞானம், மாநில பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், மாவட்ட துணைத் தலைவர் கணேசன், மாநில சிறப்பு பேச்சாளர் பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பேச்சாளர் பால்துரை சிறப்புரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் பேரூர் தலைவர்கள் சிவகிரி சண்முக சுந்தரம், வாசுதேவநல்லூர் செல்வராஜ், ராயகிரி காளியப்பன், மாவட்ட விவசாய அணி மணிகண்டன், செங்கோட்டை முன்னாள் யூனியன் தலைவர் சட்டநாதன், வெள்ளபாண்டி, அய்யாதுரை, காந்தி, பன்னீர், கீழப்பாவூர் பேரூராட்சி துணைத் தலைவர் ராஜசேகர், ராமநாதபுரம் நிர்வாகிகள் அருணகிரிசாமி, அண்ணாமலை, சாமி, ஜெயராமன், தேவிபட்டணம் சுதாகர், ஜெயராமன், இனாம் கோவில்பட்டி பால்ராஜ், வடக்கு சத்திரம் மாடசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story