கவர்னரை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
குடியாத்தத்தில் கவர்னரை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகில் வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜி.சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். குடியாத்தம் வட்டார தலைவர்கள் வீராங்கன், ஜோதி கணேசன், பெரியசாமி, தனசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குடியாத்தம் நகர தலைவர் கே.விஜயன் வரவேற்றார். முன்னாள் மாவட்ட தலைவர் கே.மோகன்ராஜ், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் கிருஷ்ணவேணி, மாவட்ட பொதுச்செயலாளர் பாரத்நவீன்குமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
பேரணாம்பட்டு நகர தலைவர் முஸம்மில் அகமது, பள்ளிகொண்டா பேரூர் தலைவர் அக்பர்பாஷா, மாவட்ட துணை தலைவர்கள் காமராஜ், சேகரன், மாவட்ட பொதுச் செயலாளர் வாசு, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் விக்ரம், மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் கோமதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் விஜயேந்திரன் நன்றி கூறினார்.