கருங்கலில் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக காங்கிரசார் சத்தியாகிரக போராட்டம் ;ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது


கருங்கலில் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக காங்கிரசார் சத்தியாகிரக போராட்டம் ;ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது
x

மத்திய அரசின் அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கருங்கலில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் சத்தியாகிரக போராட்டம் நடந்தது.

கன்னியாகுமரி

கருங்கல்,

மத்திய அரசின் அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கருங்கலில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் சத்தியாகிரக போராட்டம் நடந்தது.

சத்தியாகிரக போராட்டம்

மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை 10மணி முதல் மதியம் 1 மணி வரை கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் கருங்கல் பஸ் நிலையம் முன் சத்தியாகிரக போராட்டம் நடந்தது.

போராட்டத்திற்கு தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும், கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ராஜேஷ்குமார் தலைமை தாங்கி பேசினார்.

பேராபத்து

அப்போது அவர் பேசுகையில், அக்னிபத் என்கிற திட்டத்தினை மத்திய பா.ஜ.க. அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தில் 6 மாத பயிற்சியும், 42 மாத பணியும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 42 மாதத்திற்கு பிறகு 11,500 பேருக்கு வேலை உறுதி செய்யப்படும். மீதியுள்ள 34,500 பேர் வேலையில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்.

ஆயுத பயிற்சி பெற்ற இளைஞர்கள் தவறான வழியில் அழைத்து செல்லப்படுவார்களேயானால், அதைவிட பேராபத்து இந்த நாட்டிற்கு வேறு எதுவும் இருக்க முடியாது என்றார்.

போராட்டத்திற்கு வட்டார தலைவர்கள் டென்னிஸ், கிறிஸ்டோபர், பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இளைஞர்களின் ஒருங்கிணைப்பாளர் சாண்டி உம்மன், மாணவர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் அபிஜித், தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் ராபின்சன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இதில், கட்சி நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story