காங்கிரசார் தெருமுனை பிரசாரம்
சாத்தான்குளம் அருகே காங்கிரசார் தெருமுனை பிரசாரம் மேற்கொண்டனர்.
தட்டார்மடம்:
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவருமான ஊர்வசி அமிர்தராஜ் அறிவுறுத்தலின்படி மத்திய பா.ஜ.க. அரசின் ஜனநாயக படுகொலையை கண்டித்து சாத்தான்குளம் தாலுகா ஆனந்தபுரத்தில் காங்கிரசார் தெருமுனை பிரசார கூட்டம் நடத்தினர். சாத்தான்குளம் வடக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் சங்கர், சாத்தான்குளம் மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் சக்திவேல்முருகன், காங்கிரஸ் ஒன்றிய கவுன்சிலர் பிச்சிவிளை சுதாகர், சாத்தான்குளம் பேரூராட்சி மன்ற உறுப்பினர் ஜோசப் அலெக்ஸ், பன்னம்பாறை பஞ்சாயத்து தலைவர் அழகேசன், ஆனந்தபுரம் பஞ்சாயத்து தலைவர் செல்வக்கனி செல்லத்துரை, சாத்தான்குளம் வடக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் நல்லதம்பி, ஶ்ரீவைகுண்டம் தொகுதி இளைஞர் காங்கிரஸ் செயலாளர் பவுல் ஞானராஜ், பழங்குளம் கிராம காங்கிரஸ் மூத்த தலைவர் ஜார்ஜ்பிச்சை, ஆனந்தபுரம் கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர் குணம், பழங்குளம் கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர் லாசர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.