காங்கிரஸ் தெருமுனை பிரசார கூட்டம்
சிவகிரியில் காங்கிரஸ் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.
சிவகிரி:
சிவகிரி பஸ் நிலையம் அருகே காந்திஜி கலையரங்கம் முன் சிவகிரி காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தை கண்டித்தும், அதை திரும்ப பெறக்கோரியும் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. தென்காசி மாவட்ட காங்கிரஸ் ஓ.பி.சி. தலைவர் திருஞானம் தலைமை தாங்கினார். சிவகிரி நகர காங்கிரஸ் தலைவர் சண்முக சுந்தரம், மாவட்ட காங்கிரஸ் முன்னாள் பொதுசெயலாளர் குருசாமிப்பாண்டியன், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் கணேசன், மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் நம்பிராஜன், தொகுதி காங்கிரஸ் ஓ.பி.சி.தலைவர் காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிவகிரி விவசாய கூட்டுறவு சங்க டைரக்டர் விநாயகர், காங்கிரஸ் மாநில பேச்சாளர் பால்துரை சிறப்புரையாற்றினர். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் கணேசன், புளியங்குடி நகர காங்கிரஸ் தலைவர் பால்ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், வாசுதேவநல்லூர் வட்டார காங்கிரஸ் தலைவர் மகேந்திரன், மாவட்ட காங்கிரஸ் விவசாய அணி தலைவர் மணி, சங்கரன்கோவில் வட்டார காங்கிரஸ் தலைவர்கள் பன்னீர்துரை (வடக்கு), அய்யாத்துரை (தெற்கு), நகர தலைவர்கள் வாசுதேவநல்லூர் செல்வராஜ், ராயகிரி காளியப்பன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுரேஷ் இளவரசன், சிவகிரி நகர முன்னாள் தலைவர் தலைவர் மஞ்சுநாத், பொது செயலாளர் தங்கப்பாண்டியன், வாசுதேவநல்லூர் தொகுதி தலைவர் ராஜ்குமார், சிவகிரி பேரூராட்சி கவுன்சிலர்கள் உலகேஸ்வரி கணேசன், கலா என்ற கல்யாணசுந்தரி முத்து அருணாசலம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள். முடிவில், சிவகிரி நகர காங்கிரஸ் செயலாளர் வெள்ளைச்சாமி நன்றி கூறினார்.